இலங்கையில் உள்ள வீதிகளின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக இன்று(04.06.2015) காலை முதல் கூகுள் கார் வவுனியாவின் முக்கிய பிரதேசங்களில் தனது தகவல் சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையின் ஊடாக இலங்கை உட்பட 63 நாடுகளின் வீதிகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளது.
இதன்படி நவீன முப்பரிமான தொழில்நுட்பத்துடன் கூடிய காணொளிகள் பொருத்தப்பட்ட காரைப் பயன்படுத்தி இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இலங்கையின் இயற்கை அழகை முழு உலகமும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
-கஜன்-