தனுஷ்க்கு கிடைத்த புதிய விருது!!

1234

Danush

தனுஷ்க்கு தமிழிலும் ஹிந்தியிலும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் பேச வைத்தது. இந்நிலையில் பொலிவுட்டில் மிக பிரபலமான இணையதளம் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது.

அதாவது ட்விட்டரில் ரசிகர்களின் நண்பனாகவும், அன்பாகவும் பழக கூடிய தென்னிந்திய நட்சத்திரம் யார் என்ற முடிவில் 47 சதவிகிதம் பெற்று தனுஷ் முதலிடத்தில் உள்ளார்.

அவரை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் 30 சதவிகிதமும், த்ரிஷா 20 சதவிகிதமும் மற்றும் சிம்பு 9 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் ரசிகர்களின் நட்பு நாயகன் என்ற பெயரில் பொலிவுட் இணையதளம் தனுஷ்க்கு இந்த விருதை வழங்கியது.