வவுனியாவிற்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!!(படங்கள்)

543

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். நேற்றைய தினம்(03.06) இவர் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

முன்பதாக ஓமந்தை கள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்ற அவர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பாக கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலையினை தரம் உயர்த்துவதன் அவசியம், சுயதொழில் வாய்ப்பு, வீடமைப்புவசதி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் எடுத்து விளக்கினர்.

இதேபோன்று வவுனியா நகர்ப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளுடான சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பிலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதனையடுத்து கூமாங்குளம் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன் பிரகாரம் சிறிராமபுரம் காத்தார்சின்னக்குளம் கிராம மக்களையும் சந்தித்திருந்தார். இதன்போதும் மக்கள் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அவருக்கு தெரியப்படுத்தினர்.

குறிப்பாக சுயதொழில்வாய்ப்பு, மின்சாரம், சமுர்த்தி உதவித்திட்டம், வீடமைப்புவசதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.

குறித்த இச்சந்திப்புக்களின் போது தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாக டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சாந்தன் உடனிருந்தார்.

12 13 14 15 16 17 18 19