நான்கு மாத கர்பிணியாக 13 வயதுச் சிறுமி!!

594

Abuse

அதிக வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட 13 வயதையுடைய சிறுமி ஒருவர் நான்கு மாத கர்பிணியாக அடையாளம் காணப்பட்டார்.

செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி அதிக வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் போது வைத்தியர் சிறுமியைப் பரிசேதனைக்கு உட்படுத்தியதன் பின் சிறுமி நான்கு மாத கர்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இந்த விடையம் குறித்து செவனகல பொலஸாருக்கு அறிவிக்கப்பட்டபோது செவனகல பொலிஸார் சிறுமியடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து இதனுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் 32 வயதையுடைய இரு பிள்ளைகளின் தந்தையெருவரை கைது செய்துள்ளனர்.