
கிளிநொச்சி – பரந்தன் – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுவன் குறித்த சிறுமியினால் அடையாளங்காட்டப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி சிறுமி கடத்தப்பட்டு பொது மலசலகூடம் ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அடையாள அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த சிறுமியினால் 15 வயது சிறுவன் அடையாளங் காட்டப்பட்ட நிலையில் அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஆனையிறவைச் சேர்ந்த சிறுமியொருவர், இடம்பெயர்ந்து பரந்தன் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடத்தப்பட்டு பொது மலசலக்கூடம் ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்படி சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுமி வழங்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்துடன் மேலும் யாரேனும் தொடர்பு கொண்டுள்ளனரா? என்பது குறித்து அறிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





