வவுனியா வேப்பங்குளம் கனறா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று (04.06.2015) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலையின் இயக்குனர் அருட்சகோதரி கத்தறீன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கோபாலப்பிள்ளை தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு), அருட்பணி எ.லக்ஸ்டன் டி சில்வா (பங்குத் தந்தை-புனித சூசையப்பர் ஆலயம்), சிவஸ்ரீ வே.சரண்ணிய புரீஸ்வரக்குருக்கள் (ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வேப்பங்குளம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விளையாட்டுப் போட்டியில் சிறுவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-





