சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள சுவற்றில் விழிப்புணர்வு சுவரோவியம் ஒன்றினை நேற்று (04.06.2015) வரைந்துள்ளனர்.
இச் சுவரோவியம் லினுக்சன், நிருபன், நிரோஜன், ஜெரோம், ஜீவலவன், ஜோன்சன் ஆகிய மாணவர்களால் வரையப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் உயரமான சுவற்றில் சமுதாய விழிப்புணர்விற்காக இவர்கள் வரைந்த ஓவியம் பாராட்டத்தக்கது. இவர்களுக்கு எமது வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-






