யாழில் பிரசுவித்த சிசுவை ஏற்க மறுத்த தாய்!!

722

Baby

பிரசுவித்த சிசுவை வேண்டாம் என கூறிய தாய் ஒருவரை, கொழும்புத்துறையில் உள்ள காப்பகத்தில் தடுத்து வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி, 30 வயதுடைய பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.

எனினும் அந்த குழந்தையை தான் ஏற்க மாட்டேன் என வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அவர் கூறியுள்ளார். அதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் யாழ். பொலிசாரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்தது.

பொலிசார் குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும், தவறான உறவு மூலமாக தான் இந்த குழந்தையை பிரசவித்ததாகவும், இந்த குழந்தையை ஏற்றுக்கொண்டால் சமூகத்தில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் எனவே இந்த குழந்தையை ஏற்றுகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் யாழ். சிறுவர் நீதிமன்றில் அந்த பெண்ணை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான் குழந்தையையும் பெண்ணையும் கொழும்புத்துறையில் உள்ள காப்பகத்தில் எதிர்வரும் 24ம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.