வவுனியாவில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்!!(படங்கள், காணொளி)

822

உலக சுற்றாடல் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு வவுனியா மத்திய சுற்றாடல் அதிகாரசபை வவுனியா நகரசபையுடன் இணைந்து சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை இன்று(05.06.2015) காலை 10 மணியளவில் வவுனியா பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் நடாத்தியது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொறுப்பதிகாரி G.A.J.பாலசூரிய தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி.S.மோகநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.S.கிருபாசுதன்(திட்டமிடல் பணிப்பாளர்- வவுனியா கச்சேரி), திரு.கா.உதயராசா(வவுனியா பிரதேச செயலாளர்), திரு.P.M.குமார( உதவி ஆணையாளர்- உள்ளூராட்சித் திணைக்களம்), திரு.K.சத்தியசீலன் (வவுனியா நகரசபைச் செயலாளர்), திரு.சன்ன ரட்னாயக(H.I.Q), திருமதி.S.கிஷோர்( செயலாளர்-வவுனியா தெற்கு பிரதேச சபை) உட்பட பிரதேச பிரமுகர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

-பாஸ்கரன் கதீசன்-

5 6 7 8 9 10 11 12 13 14 15