உலக சுற்றாடல் தினமான இன்று வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து அதிபர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் காலை 8.30மணி தொடக்கம் 10.30மணி வரி இரண்டு மணித்தியாலங்கள் பாடசாலை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
உலக சுற்றாடல் தினத்தில் இந்த சிரமதானம் மற்றும் துப்புரவுப்பணியில் சமூகத்துடன் இணைந்து இந்த மாணவர் சமுதாயமும் ஈடுபட்டமை பாராட்டுதலுக்குரிய விடயமென சிரமதானத்தில் கலந்து கொண்ட தரப்பினர் தெரிவித்தனர் .
படங்கள்:முருகதாசன்