ஆந்திராவுக்குத் தாவும் சூர்யா!!

580

suryaபிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்து காசு பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மட்டுமே பல்வேறு படங்கள் வேறு மொழிகளில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல தமிழில் வெற்றிபெற்ற படங்களை பிற மொழிகளிலும் ரீமேக் செய்வார்கள். குறிப்பாக, சூர்யா நடித்த படங்கள் தெலுங்கில் ரீமேக் அல்லது டப் செய்யப்பட்டு, ஆந்திராவில் வசூலை வாரிக் குவிக்கும்.

ஆந்திராவுக்கு ஏற்றபடி காரசாரமான படங்களில் சூர்யா நடிப்பதால், அங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனால், நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் சூர்யா.

இதைத் தெரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவின் மேனேஜருக்கு போன் செய்து கால்ஷீட் கேட்டு வருகின்றனர். தற்போது லிங்குசாமி படத்தில் நடிக்க இருக்கும் சூர்யா அதை முடித்துவிட்டு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

2D Entertainment என சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது பற்றி சூர்யா “சில சமயங்களில் நல்ல கதைகளைக் கேட்கும்போது கால்ஷீட் பிரச்னையால் அதில் நடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதற்காக அந்த கதைகளை அப்படியே விட்டுவிட முடியவில்லை. அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதால்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.