குழந்தையை கொல்லும் திகிலூட்டும் காட்சி : வீடியோவை அகற்ற பேஸ்புக் மறுப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!(காணொளி இணைப்பு)

630

Baby

ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் பயன்பாட்டுப் பக்கத்தையும் தடை செய்துவிடும் சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’, ஒரு வாளி நீருக்குள் பச்சிளம் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்ய முயல்வதுபோல் வெளியாகியுள்ள வீடியோவை தடை செய்ய மறுத்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் ஒரு பச்சிளம் குழந்தையை அதன் தாயார் ஒரு வாளி நீருக்குள் போட்டு தோய்த்து எடுக்கிறார். குழந்தை கத்திக் கதறுவதை பொருட்படுத்தாமல், அடுத்தடுத்து அவ்வாறே செய்யும் அவர், குழந்தையின் இளம்பிஞ்சு காலைப் பிடித்து தலைகீழாக தூக்குகிறார். அதன் தாடையை பிடித்தபடி முன்னும், பின்னும் ஆட்டி, உதறுகிறார்.

சுமார் இரண்டு நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் சில நொடிகளுக்குள் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று போகின்றது.

இதைவைத்து, அந்த குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டதாக பார்வையாளர்களில் பலர் கவலை தெரிவித்துள்ளனர். இதைப்போன்ற ஒரு ‘கொலைபாதக’ வீடியோவை பேஸ்புக்க்கில் பதிவேற்றம் செய்ய அனுமதி அளித்தது ஏன் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், திகிலை ஏற்படுத்தும் அந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என பேஸ்புக் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை தொடர்பாக ஆராய்ந்த பின்னரே இந்த வீடியோவை அனுமதித்துள்ளதாக விளக்கம் அளிக்கும் பேஸ்புக் நிர்வாகம், இது ‘பேபி யோகா’ எனப்படும் குழந்தைகளுக்கான நீர் யோகாசன பயிற்சியாகும். அந்த பயிற்சியை ஒருதாய் தன்னுடைய குழந்தைக்கு அளிக்கும் காட்சிதான் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.