மட்டக்களப்பில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

705

hang

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஐ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

களுதாவளை – மாவடி வீதியைச் சோந்த 25 வயதுடைய குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.