யாழில் எரிந்த நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

734

Body

சாவகச்சேரி – கல்வயல் – இல்வாரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வேதவனப் பிள்ளையார் கோவிலடி – கல்வயல் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரத்னம் (56) என்பவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்ட இவர் இன்று காலை இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.