பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்!!(படங்கள்)

849

யாழ்.குடாநாட்டில் பிரபல்யமான கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

குடாநாட்டில் கடந்த வருடம் குறித்த கவுணாவத்தை வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்திருந்த நிலையில், இந்து அமைப்புக்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் இன்றைய தினம் வழிபாடுகள் நடைபெற்றிருந்தது.

எனினும் இவ்வாண்டு பிரதேச சபையினதும், பொதுச்சுகாதார பரிசோதகர்களினது கண்காணிப்புடன் ஆடுகள் பலியிடப்பட்டன. இந்நிலையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

1 2 3 4