மன்னார் தள்ளாடியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் வங்காலையிலிருந்து தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெப் ராக வாகனத்துடன் மோதியே குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கெப் ரக வாகனத்தின் சாரதியையும் மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.






