பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்த பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!!

778

aarthi agarwal hot photos

பம்பரக் கண்ணாலே படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஆர்த்தி அகர்வால். இப்படத்தில் இவர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் அமெரிக்காவில் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 31. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் திடீர் என்று இன்று இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.