வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அண்மைய பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் உணரப்பட்டுள்ளமையால் நேற்றைய தினம் 06.05.2015 சோதனை நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
வவுனியா வைத்திய சாலையில் கோவில் குளத்தில் டெங்கு தாக்கத்துக்குள்ளான நோயாளிகள் அனுமதிக்கபட்டதை தொடர்ந்தே மேற்படி சோதனை நடவடிக்கைகளில் சுகாதார திணைக்களத்தின் டெங்கு ஒழிப்பு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர் .
பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு டெங்கு நுளம்புகளை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .