வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழா நிகழ்வு.!(படங்கள்)

663
வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு  (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு. சு.உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்சதி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள் கே.சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், எம்.பி நடராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், கல்வி சார் விருந்தினர்களாக வ.சிதம்பரநாதன் (பீடாதிபதி தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வுகளாக திரு. தர்மலிங்கம் நாகராஜன் (லண்டன்) அவர்களது நிதியில் அமைக்கப்பட்ட நுழைவாயில் தொகுதி திறப்பு விழா, மான்மியம் என்ற வித்தியாலய சஞ்சிகை வெளியீடு, மரம் நாட்டும் வைபவம், சிறுவர் பூங்கா திறப்பு விழா மற்றும் தரம் 05ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை என்பவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றன.
11350654_836370639785451_7684375699696575013_n 11351355_836370746452107_299137834330372326_n 11377098_836370009785514_3186518013971791597_n 11377102_836370169785498_4031236388652445330_n 11391488_836370469785468_694071418812158161_n 11393199_836370779785437_222719632768723349_n 11401540_836370096452172_5723869504527786889_n 11427174_836370446452137_2631293575457291180_n