யாழில் ஆணொருவருடன் ஓரின உறவில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்கள் கைது!!

503

Abuse

யாழில் ஆணொருவருடன் தகாத உறவு கொண்டதுடன் அதனை வீடியோ எடுத்து மிரட்டிய இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாசையூர் மற்றும் நாவந்துறையை சேர்ந்த இரு இளைஞர்கள் நல்லூர் ஆலயத்துக்கு அருகில் உள்ள பொது மலசல கூடத்திற்கு அழைத்து சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் குறித்த இளைஞருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த இரு இளைஞர்களும் தாம் எடுத்த வீடியோ காட்சியினை இணையத்தில் பதிவேற்றம் செய்ய போகின்றோம். அதனை தவிர்ப்பதாயின் எமக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என சில தினங்களாக மிரட்டி வந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் அது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டை அடுத்து பொலிசார் முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன் என தொலைபேசியில் கூறி இருவரையும் பிரத்தியோக இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு சிவில் உடையில் நின்ற பொலிசாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.