வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

712

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் நேற்று 08.06.2015 மாலை 3 மணியளவில் இடம்பெற்ற கார்- மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மரகதகுமார் (வயது 47) தலையில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கார், மோட்டார் சைக்கிள் இரண்டும் கண்டி வீதிப் பகுதியால் சென்றவேளை கார் முந்திச்செல்ல முற்பட்டவேளை இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். இப் பகுதியில் கடந்த 4 தினங்களில் 3 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று பலர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாஸ்கரன் கதீசன்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA