மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!

507

Abuse

11 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக சிறுமியின் தாய் அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் தந்தையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை தனது மகளை பல தடவைகள் பலாத்காரமான முறையில் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தந்தையின் இரண்டாவது சட்ட பூர்வமற்ற மனைவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்தே சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாத்திவில்லு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.