போதை­வஸ்து பாவ­னை­யி­ல் ஈடுபட்ட பாட­சாலை மாண­வர்கள் கைது!!

495

Arrested

போதை­வஸ்து பாவ­னையில் ஈடு­பட்­டி­ருந்த இரு­பா­ட­சாலை மாண­வர்கள் லுணுகலைப் பொலிஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

லுணு­க­லை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாண­வர்கள் இருவரே நேற்­றைய தினம் பாட­சாலை வேளையில் போதை­வஸ்து பாவ­னையில் ஈடுபட்டுள்ளனர். இவ்­விரு மாண­வர்கள் மீது சந்­தே­கங்­கொண்ட ஆசி­ரியர் விடயம் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு அறி­வித்தார்.

அவ்­வி­டத்­திற்கு விரைந்த பொலிஸார் மாண­வர்­களைக் கைது செய்து விசா­ரணைக்குட்­ப­டுத்­தினர். அதன்­போது போதைப் பொருட்­களை லுணுகலை நகரில் அமைந்­துள்ள கடை­யொன்றில் பணம் கொடுத்துப் பெற்­ற­தாக தெரி­வித்­தனர். அத­னை­ய­டுத்து குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் அக்கடையை உட­ன­டி­யாக மூடி­ய­துடன் அங்­கி­ருந்த மூவரைக் கைது செய்­துள்­ளனர்.

தொடர்ந்தும் பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.