வவுனியா தெற்கு கல்விவலயதிற்குட்பட்ட பாடசாலைகளை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வவுனியா தெற்கு கல்விவலயத்தின் செயல்பாடு குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு கல்விவலயத்தின் ஆங்கில தினபோட்டிகள் எதிர்வரும் 13.06.2015 சனிக்கிழமையும் அதே தினத்தில் மாகாண மட்டத்தில் நடைபெறும் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சையும் ஒழுங்கு செய்யபட்டுள்ளமையானது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . கடந்தவருடமும் இந்த ஆங்கிலத்தின போட்டிகளை வவுனியா தெற்கு கல்விவலயம் நடாத்தியிருந்த போதும் இதே மாதிரி பல்வேறு போட்டிகள் நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .
தொடர்புபட்ட செய்தி:(கடந்த வருடத்தில்)
வவுனியாவில் நெருக்கடிக்குள்ளான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களது உள்ளக் குமுறல்!!
மாகாண மட்டத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை கவனத்தில் கொள்ளாது வலய கல்வி பணிமனை ஆங்கில தின போட்டிகளையும் ஏக காலத்தில் நடாத்துவதால் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர் .
இரண்டு நிகழ்வுகளையும் ஒரே நாளில் வைப்பதனால் மாணவர்கள் எதில் கூடிய கவனம் செலுத்த முடியும் என அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர் .
வவுனியா தெற்கு கல்வி வலயம் துரித நடவடிக்கை எடுத்து மாற்று ஒழுங்கு ஒன்றினை செய்யும் வண்ணம் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுகொள்கின்றனர்.