வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வட மாகாண முதலமைச்சரால் திறந்துவைப்பு!!(படங்கள்)

952

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றை வைபவ ரீதியாக திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்ச்சி, வித்தியாலயத்தின் அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நேற்று (11.06.2015) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு நாடாவை வெட்டி சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகணசபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. மஹிந்த ஆய்வுகூடத்தில் பார்வையிட்ட சி.வி.விக்கினேஸ்வரன் பதிவேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீஷன்-

120010100001000001     3 4  6 7 8 9 10 11