இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு : 8 வருடங்களுக்குப் பின்னர் முபாரக்கிற்கு அணியில் இடம்!!

256

SL

பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டிக்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அணியில் அஞ்சலோ மத்­தியூஸ் தலை­ வ­ரா­கவும், லஹிரு திரி­மான்னே உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ணியில் எட்டு வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஜெகான் முபாரக் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணித் தெரி­வு­கு­றித்து தெரி­வுக்­குழுத் தலைவர் கபில விஜேகுண­வர்­தன கருத்துத் தெரி­விக்­கையில்,

‘‘எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் முபாரக் டெஸ்ட் போட்­டி­களில் பிர­கா­சிக்கத் தவ­றி­ய­போ­திலும் தற்­போது உள்ளூர் கிரிக்கட் போட்­டி­களில் துடுப்­பாட்­டத்தில் அவர் முழு அள­வி­லான திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­கின்றார்.

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டும் அனு­ப­வமும் இள­மையும் கலந்த அணியைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எமது திறந்த கொள்­கையின் அடிப்­ப­டை­யிலும் அவ­ருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்’’ தெரி­வித்தார்.

நடந்து முடிந்த இரண்டு உள்ளூர் கிரிக்கெட் பருவ காலங்­களில் தலா 1000க்கும் மேற்­பட்ட ஓட்டங்களைக் குவித்­துள்ள ஜெஹான் முபாரக், நடந்து முடிந்த பருவ காலத்தில் 81.78 என்ற துடுப்பாட்ட சரா­ச­ரியைப் பதிவு செய்­தி­ருந்தார்.

மேலும் அவ­ரது களத்­த­டுப்பு ஆற்றல் அளப்­ப­ரி­யது என ஜொன்டி றோட்ஸ் அண்­மையில் சான்­றிதழ் வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக பெரும்­பாலும் கௌஷால் சில்­வாவும் திமுத் கருணா­ரட்­னவும் விளை­யா­டுவர் எனக் குறிப்­பிட்ட அவர்இ இறுதி பதி­னொ­ருவர் இன்னும் தீர்மானிக்­கப்­ப­ட­வில்லை எனவும் கூறினார்.

குழாமில் குமார் சங்­கக்­கார உட்­பட நான்கு விக்கட் காப்­பா­ளர்கள் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில் யார் விக்கட் காப்­பா­ள­ராக களம் இறக்­கப்­ப­டுவார் என்­பது தெரி­ய­வில்லை. இலங்கை அணியின் தலை­வ­ராக ஏஞ்­சலோ மத்­தி­யூஸும் உதவி அணித் தலைவர் லஹிரு திரி­மான்­னவும் தொடர்ந்தும் விளை­யா­ட­வுள்­ளனர்.

இவர்­க­ளை­விட துடுப்­பாட்ட வீரர் கித்­ருவன் விதா­னகே, சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான ரங்­கன ஹேரத், டில்­ருவன் பெரேரா, தரிந்து கௌஷால் ஆகி­யோரும் வேகப் பந்து வீச்­சா­ளர்­க­ளான நுவன் பிரதீப், தம்­மிக்க பிரசாத், துஷ்மன்த சமீர ஆகியோரும் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை உபாதைக் குள்ளாகியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலும் இக் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்