மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 254 பேர் உயிரிழந்ததுடன் இந்த வருடம் அந்த எண்ணிக்கை 352 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.






