வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் (GRADUATES FOUNDATION FOR DEVELOPMENT PROGRAM)கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (கைத்தொழில் வாணிப அமைச்சு) அவர்களின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களை வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அபிவிருத்தி செய்ய கூடிய வகையில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்த தயாராகி வருகின்றது.
கடந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களை சந்தித்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றதின் தலைவர் திரு .ம .ஆனந்தராஜா தலைமையிலான அதிகாரிகள் மேற்படி பாரிய அபிவிருத்தி வேலைதிட்டதிற்க்கான முதல்கட்ட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர் .
அச்சந்திப்பில் வவுனியா மாவட்டத்திலுள்ள கிராமங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் நேரடியாக கிராமங்கள் தோறும் களமிறங்கி பொதுமக்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நிகழ்த்தி திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களது அடிப்படை வாழ்வாதாரம் , தொழில்வாய்ப்பு, வீடு,காணி, வீதி அபிவிருத்தி, விவசாயம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்பாக பெறப்பட்ட விடயங்களை அமைச்சர் அவர்களுக்கு எடுத்தியம்பி அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் கிராமங்களை அபிவிருத்தி செய்வதன் அவசர அவசியத்தையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அமைச்சரிடத்தில் சமர்ப்பித்ததன் பயனாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தின் கோரிக்கைகளுக்கு அமைச்சரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது .
அதன் படி பலகோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை அமைச்சரவை மூலம் ஒதுக்கப்படும் நிதி மூலங்களை கொண்டு வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தினால் அடையாளபடுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மேற்கொள்வதென கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
அதன்பிரகாரம் வவுனியா மாவட்டத்திலுள்ள கிராமங்களில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தினால் அடையாளபடுத்தப்பட்டுள்ள பின்வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதற்கு அமைச்சர் அவர்கள் முன்வந்துள்ளார்.
அவையாவன
• வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் கிராமங்களுக்கு 1000 வீடுகளை முதல்கட்டமாக பெற்றுக்கொடுத்தல்.
• வவுனியா மாவட்ட கிராமங்களில் 200KM நீளமான உள்ளக வீதிகளை புனரமைப்பு செய்தல்.
• வவுனியா மாவட்டத்தில் மேலும்20 தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் தெரிவு செய்யப்படும் 400 பெண்களுக்கு சுயதொழில் செய்யகூடிய வகையில் தையல் பயிற்சி வழங்கல்.
• வவுனியா மாவட்டத்தில் 2000 விவசாயிகளுக்கு தலா 6000.00ரூபாய் பெறுமதியான விதைகள் மற்றும்விவசாய உள்ளீடுகள் என்பவற்றை வழங்கல் .
• வவுனியாவில் 50 கமக்கார அமைப்புக்களுக்கு தலா ஒருலட்சம் (100000.00)ரூபாய் பெறுமதியான 50 நீர் இறைக்கும் இயந்திர (water pumps ))தொகுதிகள் பெற்றுக் கொடுத்தல்.
• வவுனியாவில் 2000பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் .
• வவுனியாவில் 250 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட கொடுப்பனவு திட்டம் .
• வவுனியாவில் உள்ள 1000 வயதுமுதிர்ந்த பிரஜைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் கௌரவிப்பு.
இவற்றினை விட மேலும்
• வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற 100 பட்டதாரிகளுக்கு ஒருவருட காலத்துக்குள் நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுத்தல்.
• வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 1000இளைஞர் யுவதிகளுக்கு 1000நாட்களுக்குள் (மூன்று வருட காலத்தினுள்) நிரந்தமான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல்.
எனப் பல்வேறு பட்ட அபிவிருத்தி வேலை திட்டங்களைவவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தின் (GRADUATES FOUNDATION FOR DEVELOPMENT PROGRAM)) மூலம் நிறைவேற்றி கொடுப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளதாக கடந்த 11.06.2015வியாழக்கிழமை வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான சந்திப்பு நிகழ்வின் போது கலந்து கொண்ட வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தின் (GRADUATES FOUNDATION FOR DEVELOPMENT PROGRAM) தலைவரும் வடமாகாண ஏற்றுமதி ஊக்குவிப்பு விரிவாக்கல் இணைப்பாளருமான திரு .ம. ஆனந்தராஜா தெரிவித்தார்.
படங்கள் வீடியோ : வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கம்