மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை!!

530

MERS

மத்திய கிழக்கு நாடுகளிலும் தென்கொரியாவிலும் பரவிவரும் மேர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டு திரும்புவோருக்கு ஐ.டி.எச் போன்ற சில வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேர்ஸ் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவாமலிருக்கும் வண்ணம் முன்னாயத்த பாதுகாப்பு திட்டங்களை வகுக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் 07 புதிய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . 16 பேர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 121 பேரில் 10 பேர் உடல் நலனுடன் மீள திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.