வித்தியா கொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு!!

499

Inv

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரை 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்வாகற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (15.06) விசாரணைக்கு வந்தபோது ஊர்காவற்துறை நீதவான் லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை 13.07.2015 வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பில் வித்தியாவின் தாய், சகோதரன், ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

அத்துடன் வழக்கு தொடர்பான தடையப் பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. அந்த பொருட்களை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.