வவுனியாவில் கடந்த ஒரு மாதத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!!

518

Abuse

வவுனியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று (14.06) வரையிலான கடந்த ஒரு மாத காலத்திற்குள் சிறுமிகள், மாணவிகளை துஸ்பிரயோகம் செய்ததாக 6 பேருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றில் சிலருக்கு எதிராக பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இதன்படி ஆசிரியர் ஒருவருக்கு எதிராக 17 முறைப்பாடுகளும் மற்றுமொரு ஆசிரியருக்கு எதிராக 9 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.



இவ் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிஸார் இரு ஆசிரியர்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.