வவு/ கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியர் ஸ்ரீபிரியா தலைமையில் 14.06.2015 ஞாயிற்றுகிழமை அன்று இடம்பெற்றது .
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், கந்தபுரம் வாணி வித்தியாலய அதிபர் திரு.பாலச்சந்திரன், கந்தபுரம் கிராம சேவையாளர், தொழிலதிபர் திரு.பழனிவேல், அயல் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.