வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதான வீதியைப் புணரமைத்துத்தருமாறு கோரி இப்பகுதி மக்கள் வவுனியா நகர பிரதேசசபை வாகனத்தினை மறித்து இன்று (16.06.2015) இப்பகுதியில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சிலதினங்களுக்கு முன் இப்பாதையினை புணரமைப்புச் செய்வதாகக் கூறி கற்களை மட்டும் வீதிகளிலுள்ள கிடங்குகளுக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும், மறுபடியும் இன்று இப்பாதையின் புணரமைப்புக்கென வவுனியா நகர பிரதேச செயலக ஊழியர்கள் பாதைப் புணரமைப்பில் ஈடுபட்டபோது தமக்கு முழுமையான புரணமைப்பே தமக்குத் தேவை எனக்கூறி பிரதேச செயலக வாகனத்தினை மறித்து தமது எதிர்ப்பினை தெரிவித்ததாகவும் தெரிவித்தனர்.
இப்பிரதான வீதியூடாக அண்ணாநகர், மாமடுவ, ஸ்ரீராமபுரம். அட்டமஸ்கட, கருவல்புளியங்குளம், மகாறம்பைக்குளம் போன்ற பிரதேசங்களின் மக்கள் பயணிக்கின்றனர். மேலும் இவ்வீதியில் மின் விளக்குகளைப் பொருத்தவதற்கு நடவடிக்கையினையும் எடுக்குமாறும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-






