வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த ஐம்பொன் உலோகங்களைத் திருடிச்சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன் நிலையில் இன்று மதியம் ஆலயத்தின் மூலஸ்தான நரசிங்கர் உரிய ஆகம முறைப்படி சிவாச்சாரியார்களால் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
எனவே எதிர்வரும் சனிக்கிழமை(20.06) ஆலயத்தின் பொங்கல் விழா திட்டமிட்டவாறு மிகச் சிறப்பான முறையில் நடைபெறும் எனவும் பக்தர்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் ஆலய பரிபாலன சபையினர் வவுனியா நெற்றைத் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மூலஸ்தானத்தை உடைத்து திருட்டு (படங்கள், வீடியோ இணைப்பு)..!







