வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!(படங்கள்)

577

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்று (16.06.2015) வட மாகாண கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியாவின் முன்னணிப் பாடசாலையான சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்றிருந்ததுடன் ஆய்வுகூடப்பணிகளும் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் ஆய்வுகூடத்தினை நேற்று வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா திறந்து வைத்தார். இதன்போது வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, எம்.பி.நடராஜ், எம்.தியாகராசா, எஸ்.ஜெயதிலக உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14