10 வயது சிறுவனின் கள்ளக்காதல் : 7 லட்ச ரூபாய் அபராதம்!!

603

Pak

பாகிஸ்தான் நாட்டின், சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனுக்கு பழங்குடியின நீதிமன்றம் 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

10 வயதுடைய பங்க்லானி பழங்குடியின இனத்தை சேர்ந்த அச்சிறுவன், பக்ரானி என்ற வேறொரு பழங்குடியினத்தை சேர்ந்த 30 வயதுக்கும் அதிகமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டான்.

இதனால் இரு பழங்குடியினத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரம் பழங்குடியின நீதிமன்றமான ஜிர்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் விசாரணையின் முடிவில் 10 வயது சிறுவனுக்கு 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஜிர்கா உத்தரவிட்டது.

இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் 50000 ஆயிரம் ரூபாய் அபராதத்தை உடனடியாக கட்டியதுடன், எஞ்சிய தொகையை 3 மாதங்களில் செலுத்துவதாக உறுதியளித்தனர். இது போன்ற பஞ்சாயத்து நடைபெற்றது என்பதை ஒப்புக்கொண்ட சிந்து மாகாண தலைமை போலீஸ் அதிகாரி உமர் துபெய்ல், பழங்குடியின் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.