வவுனியாவில் கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை : வட மாகாண சபை உறுப்பினர் எ.ம்.பி.நடராஜ்

694

10807_1456340957995443_3698804071977078054_n

வவுனியா பிரதேசசெயலக பிரிவில் தோணிக்கல்,  கூமாங்குளம், கந்தபுரம், ஆசிகுளம், சாஸ்திரிக்குளாங்குளம் சமளங்குளம், மகாறம்பைகுளம், ஈச்சங்குளம், மரைக்காரம்பளை, ராஜேந்திரன்குளம்  ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வெங்கலசெட்டிகுள பிரதேச செயலக பிரிவில் ஆண்டியபுளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவிலும் கிராமங்களின் எண்ணிக்கையும் அங்குள்ள மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதனால் அதற்கேற்ற வகையில் கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அக்கிராம மக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் எ.ம்.பி.நடராஜ் அவர்களால் வட மாகாண சபையில் முன்மொழிவு செய்யப்பட்டது.

இதற்கிணங்க

  • தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் 3983 குடும்பங்களும் 13934 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவில் நான்கு கிராமங்களும் 2390 குடும்பங்களும் 8027 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 1583 குடும்பங்களும் 6833 அங்கத்தவர்களும் உள்ளனர்.
  • ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் பதின்மூன்று கிராமங்களும்1584 குடும்பங்களும் 5732 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • ஈச்சங்குளத்தில் கிராம அலுவலர் பிரிவில் எட்டு கிராமங்களும் 1433 குடும்பங்களும் 4716 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • மரைக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவில் ஐந்து கிராமங்களும்1236 குடும்பங்களும் 4369 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • சமணங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஐந்து கிராமங்களும்1093 குடும்பங்களும் 3730 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் நான்கு கிராமங்களும்1085 குடும்பங்களும் 3732 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • ராஜேந்திரன்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஒன்பது கிராமங்களும்708 குடும்பங்களும் 2749 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஆறு கிராமங்களும்1168 குடும்பங்களும் 4353 அங்கத்தவரும் காணப்படுகின்றனர்.
  • மேலும் அவர் கூறியதாவது இவ்வாறு கிராம சேவையாளர் பிரிவில் கிராமங்களின் எண்ணிக்கையும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படும் போது கிராம சேவகரால் மக்களுக்கு வழங்கப்படும் சேவையும் கிராம சேவையாளரிடமிருந்து மக்கள் பெற்றுக்கொள்ளும் சேவையும் கேள்விக்குறியாகிறது என குறிப்பிட்டுள்ளார்.