இலங்­கையில் எச்.1 என்.1 தொற்­றுக்கு இலக்காகி 24 பேர் பலி!!

646

H1N1

இன்­பு­ளு­வென்சா எச்.1 என்.1 வைரஸ் தொற்று இலங்­கையில் மிக வேக­மாக பரவி வரு­வது தற்போது அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் இது­வரை அந்த வைரஸ் தொற்­றுக் காய்ச்சலுக்கு இலக்­காகி 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த 24 பேரில் 10 பேர் கர்ப்­பி­ணி­க­ளாவர் என தாய் சேய் மரணம் மற்றும் நோய்­களை தடுக்கும் தேசிய வேலைத்­திட்­டத்தின் முகா­மை­யாளர் விஷேட வைத்­திய நிபுணர் கபில ஜய­ரத்ன தெரிவித்துள்ளார்.

இன்­பு­ளு­வென்சா எச்.1 என்.1 வைரஸ் காய்ச்­ச­லா­னது மிக வேக­மாக பரவி வரும் நிலையில் எவருக்­கேனும் காய்ச்சல் ஏற்­பட்டால் அதனை கணக்கில் எடுக்­காமல் இருப்­பதைத் தவிர்த்து உடனடி­யாக அருகில் உள்ள வைத்­தி­யரை நாடு­மாறும் அவர் பொது மக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அதன்­படி கர்ப்­பி­ணித்­தாய்­மார்கள் அனை­வ­ருக்கும் ஏற்­க­னவே இன்­பு­ளு­வென்சா எச்.1 என்.1 தொற்றுக்கு எதி­ரான தடுப்­பூ­சிகள் ஏற்­றப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் அவற்றை வைத்தியசாலைகளிலேயே ஏற்ற முடி­யு­மாக இருப்­பதால் காய்ச்சல் உள்­ளிட்ட நிலை­மைகள் ஏற்படும் போது உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை சந்திப்பதி சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.