இந்திய அணியை பந்தாடிய பங்­க­ளா­தே­ஷ் அணி!!

426

Ban

பங்­க­ளா­தே­ஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இந்­தியா அணி 79 ஓட்­டங்­களால் படு­தோல்­வி­ய­டைந்­தது.

இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று பங்­க­ளா­தேஷில் பகலி­ரவு போட்­டி­யாக நடை­பெற்ற ஒருநாள் போட்­டியில் நாணயச்சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணி 49.4 ஓவர்­களில் 307 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

பங்­க­ளாதேஷ் அணியின் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கிய தமிம் இக்­பாலும் சவும்ய சர்க்­காரும் அதி­ர­டி­யாக ஆடி ஓட்­டங்­களை குவித்­தனர். இந்­திய அணியின் தொடக்க பந்­து­வீச்­சா­ளர்கள் புவ­னேஷ்வர் குமார்இ உமேஷ் யாதவ் ஆகி­யோரால் தமிம் இக்­பாலை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் தமிம் 3 பவுண்­ட­ரிகள் ஒரு சிக்­ஸரை விளா­சினார். இதனால் 7ஆவது ஓவரில் பங்­க­ளாதேஷ் அணி 50 ஓட்­டங்­களை எட்­டி­யது. இதில் தமீம் இக்பால் (60) சர்க்கார் (54) ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஹசன் மற்றும் ரஹ்மான் ஆகியோர் மீண்டும் அதி­ரடி ஓட்­டக்­கு­விப்பில் ஈடு­பட்­டனர். இதில் ஹசன் (52)இ ரஹ்மான் (41) ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். இறு­தியில் பங்­க­ளாதேஷ் அணி 307 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்­தது.

308 என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய இந்­திய அணி 46 ஓவர்­களில் 228 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்து தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

இந்­திய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக தவான் மற்றும் ஷர்மா ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் ஷர்மா(63), தவான் (30), சுரேஷ் ரெய்னா(40), ஜடே­னஜா(32), குமார் (25) ஓட்­டங்கள் வீதம் பெற்­றுக்­கொண்­டனர்.

ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்­தனர். இந்­திய அணித் தலைவர் தோனி 5 ஓட்டத்துடனும்இ கோஹ்லி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளரான ரஹ்மான் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

உலகககிண்ணக் காலிறுதியில் பெற்ற தோல்விக்காக இந்தியாவிற்கு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளது பங்களாதேஷ்.