உச்சக்கட்ட சோகத்தில் யுவன் ஷங்கர் ராஜா!!

236

Yuvan

தென்னிந்திய சினிமாவில் இளையராஜாவிற்கு பிறகு அதிக படங்களுக்கு இசையமைத்தவர் அவருடைய மகன் யுவன் தான். இவர் சில வருடங்களாகவே தன் பழைய இடத்தை பிடிக்க போராடி வருகின்றார்.

இந்நிலையில் யுவனின் வெற்றி கூட்டணி இயக்குனர்கள் சில இவரை தங்கள் படங்களிலிருந்து வரிசையாக தூக்கி வருகின்றனர்.

அந்த வகையில் சுசீந்திரன் பாண்டிய நாடு படத்திலிருந்து இவரை நீக்க, அமீர்-சிம்பு படத்திலும் யுவன் இல்லை, இவருக்கு பதிலாக அனிருத் என ஒரு பேச்சு அடிப்படுகிறது.

தற்போது வந்த தகவலின் படி லிங்குசாமியும் தன் அடுத்த படத்திற்கு டி.இமானை கமிட் செய்து விட்டார். பையா, வேட்டை, சண்டைக்கோழி என லிங்குசாமியின் வெற்றி படங்களுக்கு யுவன் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து யுவனை நீக்குவது அவருக்கு கொஞ்சம் மன உளைச்சலை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.