டைனோசர்கள் பற்றிய மர்மம் அவிழ்ந்தது!!

391

dino

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகப்பெரிய வலிமையான டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து போனது ஏன் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது.

மற்ற உயிரினங்கள் பல இடர்பாடுகளை கடந்து பரிணாம வளர்ச்சியடைந்து உயிர் வாழும்போது ஏன் டைனோசர்கள் மட்டும் பூமியில் இருந்து அழிந்து போனது? என்பது நீண்டகாலமாக மர்மமாகவே இருந்தது.

இந்நிலையில், வடக்கு நியூ மெக்ஸிக்கோவை சேர்ந்த விஞ்ஞானிகள் 215 முதல் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறைகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவுகள் திங்கள் அன்று வெளியிடப்பட்டது. அதில் டைனோசர்கள் காலத்தில் புவியின் வெப்ப நிலையானது படிப்படியாக உயர்ந்துள்ள போதிலும் தாவரங்களும் தாவரவுண்ணிகளும் செழித்து வளரமுடியாத சூழ்நிலையே நிலவியுள்ளது.

மேலும் காற்றில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு இருந்ததும், வறட்சியும், வெப்ப நிலை 600 டிகிரி வரை அதிகரித்ததும் டைனோசர்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானி ஒருவர் கூறும் போது, “அப்போது நிலவிய சூழ்நிலையானது இனிமையானதாக இருக்கவில்லை. வெப்பநிலையானது கணிக்க முடியாத அளவிற்கு முன்னும் பின்னும் சென்றுள்ளது.

இதனால் காட்டுத்தீயும் பெரிய பிரச்சினையாக இருந்துள்ளது. மிகப்பெரிய உடலைக்கொண்ட டைனோசர்களுக்கு போதுமான உணவும் கிடைக்கவில்லை.

முக்கியமாக காற்றில் இருந்த கார்பன் டை ஆக்சைடு அளவானது தற்போது உள்ளதைப் போல 6 மடங்காக இருந்துள்ளது. தற்போது நாம் உருவாக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால் டைனோசர்களுக்கு நேர்ந்த அதே நிலைதான் மனிதர்களுக்கும் ஏற்படும்” என தெரிவித்தார்.