வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது பொருட்களும் மீட்பு!!

1040

வவுனியா பிரதேசத்தில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நொச்சிமோட்டை, புதுக்குளம், நெளுக்குளம், மற்றும் குருமன்காட்டுப் பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார்,

அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் நகைக்கடையில் விற்பனைக்கு தயாராகவிருந்து திருடப்பட்ட நகைகளையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணப்பகுதியில் கொள்ளைச்சம்வத்துடன் தொடர்புபட்ட பாரியகும்பலுடன் சேர்ந்தவர் எனவும் இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் பரவலாக கொள்ளையில் ஈடுபட்டமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

1 2