வவுனியாவில் இன்புளுவன்சா நோய் தாக்கம் அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

483

VAV

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகமாக காணப்படுவதனால் நோயாளர்களை பார்வையிட வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியகலாநிதி சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்புழுவன்சா ஏஎச்1என்1 என்ற தடிமன் காச்சலுடன் கூடிய வருத்தம் தற்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மிக வேகமாக பரவி வருகின்றது.

யூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரை 30 பேரை நாம் இந் நோய்க்கான அறிகுறியாளர்களாக அடையாளப்படுத்தி அதற்கான மருந்து வகையை கொழும்பிலிருந்து பெற்று அவர்களுக்கு வழங்கி காப்பாற்றி வருகின்றோம்.

இந் நிலையில் நாம் அடையாளப்படுத்தியுள்ள 30 பேரில் 12 பேர் கர்ப்பிணி பெண்களாக உள்ளார்கள். ஏனெனில் இந்த இன்புலுவன்சா நோய் அதிகமாக கர்ப்பிணி பெண்கள், இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அத்துடன் அவர்களுக்கு வேறு வருத்தங்களும் இருக்குமாயின் தாக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் எந்த கர்ப்பிணி தாய்மாரும் ஒரு நாள் காய்ச்சல் மற்றும் தடிமனாக இருந்தாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களிடம் தமது நோயைக் கூறி மருந்தை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் அதிகமானவர்கள் முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.