வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 20-06-2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்றைய இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டுவரும் வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் பகல்நேர நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்தனர். தொடர்ந்து இரவு நேர நிகழ்வுகள் 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
இந்நேரடி ஒளிபரப்பினை http://www.vavuniyanet.com/live-2 இம் முகவரியில் பார்வையிடலாம்.







