
வவுனியாவில் இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இன்று (20.06.2015) வவுனியா சாம்பல்தோட்டம் நெளுக்குளம் பகுதியில் உறவினரின் வீட்டில் வசித்து வந்த மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த இளைஞன் வீட்டில் உறவினர்கள் இருந்தவேளை வீட்டு அறையினுள் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
மரணமடைந்த இளைஞன் மன்னார் முருகன் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா அனஸ்டன் வயது (19) எனத் தெரியவருகின்றது.
இம் மரணம் தொடர்பாக விசாரணைகளை வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-வவுனியா நிருபர்-






