ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தினம் இன்று (21.06.215) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம்., வடமாகாணசபை உறுப்பினர்களான த. சித்தார்த்தன், எம்.பி நடராஜ், க.சிவநேசன், சி.சிவமோகன், ஆர்.இந்திரராஜா, எம்.தியாகராசா, து.ரவிகரன், க.சர்வேஸ்வரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னியின் ஊடக செயலளார் சி. பாஸ்கரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனார்..
அமரர் தோழர் க.பத்மநாபாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலிசெலுத்தும் முகமாக மெழுகுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அத்துடன் போராட்ட வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் காணொளியும் திரையிடப்பட்டதுடன் தியாகிகள் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் தெரிவான மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
-வவுனியா செய்தியாளர்-

















