வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைகளுடன் தொடர்புடைய மூவர் கைது!!

587

Kollai

வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் இவர்கள் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து கைக்குண்டு ஒன்றும், கொள்ளையிடப்பட்ட 8 பவுண் நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.