
மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது.
போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ள முதல் 7 அணிகள் என்று மொத்தம் 8 அணிகள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதி பெற முடியும்.
தற்போதைய வெற்றியின் மூலம் பங்காளதேஷ் அணி (93 தரவரிசை புள்ளிகளுடன் 7வது இடம்) சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போதுமான தரவரிசை புள்ளிகளை எட்டி விட்டது.
பங்காளதேஷ் அணி சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருப்பது உறுதியாகி இருப்பதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அல்லது பாகிஸ்தான் ஆகிய முன்னணி அணிகளில் ஒன்று வாய்ப்பை இழக்க நேரிடும்.





