வவுனியாவில் பவ்ரல் அமைப்பு ஏற்பாடு செய்த தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!!(படங்கள்)

594

பவ்ரல் அமைப்பும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பும் இணைந்து வவுனியா இந்திரன் விடுதியில் 20.60.2015 சனிக்கிழமை காலை 9மணிக்கு மார்ச் 12 பிரகடனம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் றொட்றிக் கழகம் மற்றும் சிவில் குழுக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள். கலந்து கொண்டனர்.

பிரதேசசபை மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய தேர்தல்கள் அளவுகள் 2015 மார்ச் மாதம் 12ம் திகதி பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்டது.

அதனை அடிப்படையையாகக்கொண்டு இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அரசியல்வாதிகளுக்கு வேட்புமனு வழங்கும் போது கருத்தில் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான தேர்தல்கள் அளவு முன்வைக்கப்பட்டது.

எதிர் வரும் 27ம் 28ம் திகதிகளில் வடமாகாண மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் கையெழுத்துப் பவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்களினதும் பொது அமைப்புக்களினதும் பங்களிப்புடன் இப் பவனி நடைபெறவுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் சிவில் அமைப்பக்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

பவ்ரல் அமைப்பின் திட்ட இணைப்பாளர், மஜீத் ரிசாட். மற்றும் Afrie நிறுவனத்தின் பணியாளர் சிவராசா பிரதீப் மற்றும் டான்ஸ்பர் பெரன்ஸ் நிறுவனத்தின் இணைப்பாளர் ரஞ்சித டீ சில்வா அகியோரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-வவுனியா செய்தியாளர்-

DSC00484 DSC00485 DSC00486 DSC00487