வவுனியாவில் அரச திணைக்களமட்டத்தில் டெங்குக் கட்டுப்பாடு சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (22.06.2015) பிற்பகல் 2.15 மணியளவில் சுகாதார திணைக்களத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வைத்தியகலாநிதி லவன் தலைமையில் நடைபெற்ற
இன் நிகழ்வில் பொதுசுகாதாரப் பணிப்பாளர் ஜெயா மற்றும் ஜீவராசன் (வைத்தியர் ) இணைந்து நடாத்திய டெங்குக் கட்டுப்பாடும் விழிப்புணர்வும் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்டஅரச திணைக்களங்களின் ஊழியர்கள் பங்குபற்றினர்.
-பிராந்திய செய்தியாளர்-





